பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசலும் நகலும் "கூட வந்தவன் சொன்னான்: “யாரு, நம்ம் ராமசாமி எடுத்த படம்தானே. படத்தில் 'கிரெய்ன்ஸ்' ஜாஸ்தியா யிருக்கு: ' சரியா டெவலப்' பண்ணலே, அதுதான் இப்படி இருக்கு. இந்தச் சமாதானம் செந்தில் நாயகத்தின் மனசில் அவ்வளவு லகுவில் உறைக்கவில்லை. உண்மையிலேயே அந்தப் .கைப்படம் தனது குஷ்டம் பிடித்து வரும்' முகத்தைத்தான் பிரதிபலிக்கிறதா? அந்த எண்ணத்தை அவனால் தாங்க முடியவில்லை , அதிலிருந்து அந்தப் படத்தைப்பற்றி யாரிடமும் அவன் அபிப்பிராயம் கேட்பதே இல்லை. ஒரு நாள் அவன் அறையில் உட்கார்ந்து சாவகாசி டமாக 'ஷெல்ப் ஷேவ்' பண்ணிக் கொண்டிருந்தான் . பிளேடு புதிதாகையால், ஜாக்கிரதைக் குறைவால் தோலில் அழுத்திப் பதிந்து, கன்னத்தில் ரத்தம் அளித்தது, வேதனையைத் தாங்கிக்கொண்டு, அவன், துளித்த ரத்தத்தை விரலால் சுண்டினான். கண்டிய ரத்தம் தெறித்து விழுந்தது, க்ஷ வரம் பண்ணி முடித்துவிட்டு, தனது படத்தின் பக்கம் திரும்பினான். என்ன ஆச்சரியம்? படத்திலும் கன்னத்தில் வடு தென்பட்டது : அது மட்டுமல்ல, ஒரு துளி ரத்தமும்கூட இருந்தது! செந்தில் திகைத்தான். அப்படியானால் அந்தப் படம்? அது அவன் வாழ்க் "கையையே 'பிரதிபலிக்கிறதா? புகைப்படம் என்பது உயிர் ராசியின் நகல் பிர்தி' என்றாலும், உயிர் ராசியின் இன்ப துன்பங்களும், தாழ்வு வீழ்ச்சிகளும் - அந்த நகலையும் பாதிக்குமா? அவன் யோசித்தான், அவனுந்தான் ஆஸ் கார் ஒயில்டின் டோரியன் கிரேயையும், லூகாசின் காரை யில் , கண்ட முகத்தையும் படித்திருக்கவே செய்கிறான்.