பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயலும் செல்வமும் காடு களைந்து நிலமுழு வோம்-பொன்' காந்திடும் செந்நெற் கதிர் விளைப்போம் 105டுகள் பூட்டிய ஏரொடு மானிட மாடெனச் சேற்றில் உழைத் துழுவோம் ஓடு பிளந்திடுங் கோடையிலே-நெற்றி ஓடை நீர் பாய்ச்சிப் பயிர் காப்போம்-எனில் கூடு விட்டே உயிர் ஓடிடு முன்னெங்கள் கும்பி குளிர்ந்திட உண்ணுவ மோ ? E! பாறைக் கதவை உடைத்தெறிவோம்-இருட பாதலந் தன்னிற் புகுந்து ஒளிச் சாறு பிழிந்து கதிர் சிதறும் மணிச் சாதியினங்களைப் பேர்த்தெடுப் போம் வீறு கொண்டே யலை வீசிடும் ஆழியின் 'விந்தைச் சுடர்விடும் முத்தெடுப்போம் எனில் . சோறு விரும்பிடும் ஏழைக் கொடும்பசி தொல்லை தவிர்க்க உதவிடு மோ? பஞ்சுப் புகையை உலைத் தெறிவோம்-நயம் பட்டு இழைகளாய் நாம் திரிப்போம் மஞ்சு நிகரெழில் வண்ணத்திலே துகில் மாமலையாகக் குளித்திடுவோம்-எனில் கஞ்கி யிரந்து: தலைசுழன்று-தெருக் காட்டில் விழுந்து துடி துடித்து ,