பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் நூறாண்டுக் காலமதாய் நோய்நொடியைப் பாராமல் போராடிப் பெற்றெடுத்த புண்ணியத்தை, விடுதலையை வேரோடு போக்க எண்ணும் வெள்ளையனை விரட்டாமல், சொந்தச் சகோதரரைத் துன்பத்துக் காளாக்கி வெந்து மடிகுவதோ ? வேரோடும் சாய்குவதோ ? எண்ணரிய தியாகத்தால் எழுத்தறியாப் புரட்சிகளால் மண்ணடைந்த பெருமையெலாம் . மன்னடையச் செய்குவதோ? . உன்னருமைத் தாய்நாட்டை ஊர்சிரிக்கப் பண்ணுவதோ? ஆதலினால், உம்முடைய காதல் காவியத்தைக் கடைகட்டி வையுங்காண்! சாகல் தவிர்ப்பதற்கு, சத்தியத்தைக் காப்பதற்கு, தீதறியாப் பாரதத்துச் . செல்வத்தைக் காப்பதற்கு வாருமையா! உம்முடைய . வலிமையெலாம் நாட்டுக்காய்த் தாருமையா ! இவ்வேளை தாய்நாட்டுச் சோதரர்க்கு நேர்ந்துவரும் ஆபத்தை