பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னைத்தான் கேட்கின்றேன் - -


-- -- என்ன விழிக்கின்றாய்? உன்னைத்தான் கேட்கின்றேன்; ஒரு வார்த்தை ! என்னருமைத் தமிழ்நாட்டில் எழுத்துலகின் முடிசூடா மன்னனென்றும், மறுமலர்ச்சி மாணிக்கம், தங்கமென்றும், அன்னை விலங்கறுக்கும் அவதார மூர்த்தியென்றும், உன்னையே நீபுகழ்ந்து, ' உனக்கே நீ மாலையிட்டு உன்மத்தம் கொண்டலையும் உன்னைத்தான் கேட்கின்றேன் ; ஒரு வார்த்தை ! அன்றைக்கு-~ செத்துமடிந்தான் புதுமைப் பித்தனென்றே உம்முடைய சித்தத்துளே மகிழ்ந்து செப்புமொரு ஒப்பனைக்காய், ' வானத்து அமரன்போல் வந்தான்காண் ! வந்ததுபோல் போனான்காண்!' என்றுசொலிப் புலம்பி முடித்துள்ளம்