பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரித்துப் போய்விட்ட புண்ணியரே! உம்மைத்தான் கேட்கின்றேன்; ஒருவார்த்தை ! 2 . ஏனையா? நீரெல்லாம் போனான்காண் என்றேதோ புலம்பிவிட்டுப் போயிடுவி ரானாலும், அவன் என்ன ? உம்மைப் போல்-- சிந்தனையை முற்றும் சிரச்சேதம் செய்துவிட்டு, சொந்தத்துக் கற்பனையைச் சுட்டுப் பொசுக்கிவிட்டு, வெளிநாட்டு மேதையர் தம் வெளியீட்டை ஒவ்வொன்றாய் வழிமறித்துக் களவாடி மொழிபெயர்த்து, பாத்திரத்தின் ஊர்மாற்றி, பேர்மாற்றி, உடுக்கை தனைமாற்றி, சேர்மான வேலைகளும் சிறிதே இடை கலந்து, . காயடிச்ச வார்த்தைகளில் கட்டிச் சுருட்டிவைக்கும் ஈயடிச்சான் காப்பிகளை இலக்கியமென் றேசெப்பி வாயடித்துக் கையடித்து . வாழ்ந்து மறைந்தானா?