பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் இல்லையெனில், அவன் என்ன உம்மைப்போல்- கற்பனையோ கலையழகோ கருத்தின் தனிவலியோ சொற்படிகச் சிற்பமெனச் சொலிக்கும் மொழிவளமோ அற்பத்தின் அற்பமெனும் அளவுக்கும் தேறாத கர்ப்பச் சிதைவுகளைக் கட்டிச்சுமந்து கொண்டு, பத்திரிகை ஆசிரியர் பாதத் திருக்கமலம் நித்தம் தொழுது, அவர்பின் நீங்கா நிழல்போல நத்தித் திரிந்து, வெறி நாயாய் நடை நடந்து, ஆசிரியர் வீட்டுக்கு அல்வா ஜிலேபி லட்டு ஓசியிலே அனுப்பியவர் உள்ளம் தனைக் கவர்ந்து அன்னவரைக் கண்டக்கால் அடியேன் தெண்டமெனச் சென்னிதனைத் தாழ்த்திச் சேவித்து, மேல்துண்டை முன்னி அவசரமாய் முழங்கைக்கிறக்கி, சற்றே முறுவலித்து,