பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் வால்பிடித்து, மேல்பிடித்து வலியெடுத்த திருக்கமலக் கால்பிடித்து, கைபிடித்து காக்காய்பிடித்து, எழுது கோல்பிடித்த புண்ணியத்தைக் கொட்டி யளந்தானா? கொட்டி யளந்துயிரைக் கொள்ளை கொடுத்தானா ? இல்லையெனில், அவன் என்ன உம்மைப்போல்- பெற்றெடுத்த தாய் நாட்டுப் பிரேமை தனைத்துறந்து, கற்றறிந்த நற்கலையின் கடமை தனைமறந்து, நாட்டுமக்கள் தம் வாழ்க்கை நலத்தை மறந்துவிட்டு, ஆட்டுவிக்கும் பொம்மைகளுக் காள்பிடிக்கும், வலைவீசும் வேற்றூரான் தரும்பிச்சை வெள்ளிப் பணத்துக்கும், சோற்றுக்கும், அவிசாரிச் சுகபோக வாழ்க்கைக்கும், ஊற்றுாறும் பேனாவை, உளத்தை, உடலத்தை விற்று முதலாக்கி வீழ்ந்தானா ? தன்மானப் பற்றைப் பறக்கவிட்டுப் பரிசழிந்து செத்தானா? இல்லையெனில், அவன்என்ன உம்மைப் போல்-"