பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் அல்லும் பகலும் அயராது பாடுபட்டும் கொல்லும் பசிப்பிணியைக் கொல்லுதற்குக் கூழுமின்றி சற்றே தலைசாய்த்துச் சயனிக்கக் கூரையின்றி வற்றி மெலிந்துடலம் வாடி வதங்குகின்ற எண்ணற்ற ஏழையர்தம் இழி நிலையைப் போக்குதற்குக் கண்ணற்று, கருத்தற்று: கடமை உணர்வற்று, கன்னியரின் மேனிவளக் கட்டழகை, அன்னவர்தம் மின்னல் துடியிடையை, மேலாக்கை, மேலாக்கின் பின்னணியில் மறைந்திருக்கும் பேரழகை, பேசும் விழிக் கண்ணழகை, கண்மணியின் கறுப்பழகை ---ஒவ்வொன்றாய் எண்ணிக் கணக்கிட்டு எடைபோட்டு, மதிப்பிட்டுப் பின்னர் அந்த , எழில் வளத்தை மோனை எதுகைகளால் வருணித்துத் தொழில் நடத்தித் தன்மானம் துறந்தே துட்டடிக்கும் கழிசடையாய் மாறியபின் கண்மூடிப் போனானா ?