பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 13; இல்லை யில்லை! அவன் உம்போல்- பழித்துலகம் கூறும் படைப்புக் களைப்படைத்து எழுத்துலகை மலிவாக்கி இழிவாக்கிச் சாகவில்லை! உளுத்துக் கலகலக்கும் உரைபயின்று சாகவில்லை! கொளுத்துகின்ற செந்தழலாய்க் கொடுமை செயும் நோக்காடு அழுத்தி உயிர் துடித்தாலும் அவன் அறிவு சாகவில்லை ! கடைப்பட்டு, தரங்கெட்டு கருத்தின் உரம் கெட்டு, . உடைபட்டு உருக்குலையும் உம்முடைய * வானமரப் 'படைப்பினங்கள் எல்லாம் பரிசைகெட்டுச் சீரழிந்து நடைப்பிணங்க ளாய் மாறி நாற்றம் எடுக்கின்ற நாளையிலும், இழி நரகில், சாக்கடையில் இருட்கிடங்கில் ஒளிகாணும் வழிவகைகள் தெரியாது வாடுகின்ற மானிடர்தம் பழிவாழ்வை உலகறியப் பறைசாற்றும் முறையறிந்து