பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தம் புதுத் தமிழில், புல்லரிக்கும், நெஞ்சுலுக்கும், சித்தந் தளைச் சிலிர்க்கும் செந்தமிழில் நற்கதைகள் நத்தி நம்மவர்க்கு நாளும் அளித்துவந்த பித்தனவன் கற்பனையில் பிறப்பெடுத்துத் துள்ளிவந்த சித்திரங்கள் அத்தனையும் சிரஞ்சீவி யாய்உலகில் நித்தம் நிலைத்திருக்கும் - நிலையை நீர் உணர்வீரோ? சீதக்காதி என்பான். செத்தும் கொடுத்தானென் றோதுகின்ற கூற்றைப்போல், உலகத்தே தன்னுடைய பூதவுடல் நீத்துப் போனாலும் பித்தனவன் சாதல்றியான் ; உம்போல் சாக்காடும் தானறியான்! போதலறியான்! எனினும் புகழ் அறிவான்! செய்ந்நன்றி நீதிமற வாமக்கள் நினைவிலே நின்றறிவான்! ஈதையெலாம் நீரறிந்தும் - ஏனையா புலம்புகிறீர்? புலம்பாதீர்! 1355