பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நஞ்சுக் குளிரில் வாடிடும் ஏழைக்கு நாதியளித்து உதவிடுமோ ? பண்ணை வெளியிற் பயிர் செயினும்-எங்கள் பட்டினி தீர்ந்து தொலைந்திடுமோ ? கண்ணைக் கெடுத்து நூற்ற நல்லாடை எம் . கண்ணிகர் மானத்தைக் காத்திடுமோ? மண்ணைக் குடைந்து வாரிய தங்கம் எம் மக்கள் உணவுக் குதவிடுமோ?'. 'எண்ணத் தொலையாத் துன்ப விருள் என்றைக்குத் தீர்ந்து ஒளிவருமோ? 1946