பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியக் குடியரசு திருநாளாய், வைபவமாய், தெருவெல்லாம் கெக்கலிக்கும் பெருநாளாய் எண்ணி மனம் பீடுற்றோம்--வருநாளில் இந்தக் குடியரசால் ஏழைபணக் காரனெனும் பந்தத் தளையெல்லாம் பட்டுவிழ.--சொந்தமென . உழுதுழுதும் பாடுபட்டும் உழைப்பின் பலனறியாப் பழுதுபட்டு மக்கள்குலம் பஞ்சமற-தொழுதடிமைக் கும்பிடுகள் சாத்துகின்ற குல்லாக்கள் போடுகின்ற வம்புநிறை சோம்பேறி வாழ்க்கையற,-செம்படித்த: காசும் கிடைக்குமென்றால் கள்ளக்கடை நடத்தும் நீசத் திருக்கூட்டம் நீறாக,--தேசத்தில் லஞ்சப் பிசாசுகளால் வாந்தி வரும் பேரெல்லாம் பஞ்சாய்ப் பொடித்தளாய்ப் பறந்தோட--நெஞ்சத்தில் கள்ளத்தனம் கொண்டு கண்ணில் மண் தூவுகின்ற குள்ள மனிச ரெல்லாம் கூண்டேற,--வெள்ளமென நாட்டில் நலம் கொழிக்க, நலிவுற்ற பஞ்சைமக்கள் வீட்டில் திருச்சேர்ந்து விளக்கேற--தேட்டமுடன் கலிவெண்பா யாத்திசைத்தேன் ; காசினியில் மக்கள் குலம் கலி நீங்கி வாழ்க களித்து! 1950