பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜனவரி 30 சத்தியத்தின் இன்னுருவாய், சாத்துவிகப் பேரொளியாய் பத்தியங்கள் பல நோற்று பாரதத்து நோய்நொடியைக் கத்தியற்று ரத்தமற்றுக் களைந்தெறியப் பாடுபட்ட. . சத்தியவான் போய்மறைந்தான்! சண்டாளன் கொன்று விட்டான்! 1 கடும்புலிகள் மத்தியிலே கன்றேந்திச் சென்றதுபோல் இடும்புற்ற நவகாளி இருளுடே, ஒற்றுமையை" உடும்புப் பிடிப்போடு உருவேற்றி வந்தவனைக் கொடும்பாவி துப்பாக்கி கொண்டல்லோ கொன்று விட்டான் ! 2 இந்தியர்கள் தம் நாட்டை இரண்டாகப் பிளந்தாலும் ' சிந்தையிலே பிளவற்றுச் சேர்ந்தொன்றாய் வாழ்வதற்காய் நொந்தும் நோன்புற்றும் நொடிப்பொழுதும் சோராதான் சிந்தி விட்டான் செங்குருதி ! செத்துவிட்டான் இன்றைக்கு ! 3 எங்குலத்து நாயகனின் இலட்சியத்தை நிறைவேற்றச் செங்குருதி வெள்ளத்தில் சேர்த்திடுவோம் நம் கரங்கள் ! நங்குலத்தைத் தீண்டிவரும் நச்சரவை, வேற்றுமையை, பொங்கும் விஷக் கனலைப் பொசுக்கிடுவோம் ! ஒன்றாவோம்! 1948