பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கமம் வேறுவேறு திசை மாறிச்செலும் இரு ஆறுகளை வெட்டித் தேக்கினார்--கடல் ஐந்தினையும் ஒன்று ஆக்கினார்! ஈரிரண் டாண்டினில் ஆறுபத்து மைல் தூரத்திலும் பணி யாற்றினார்-புவித் தோற்றத்தையே உகு மாற்றினார்! ஆறின் இருகரை தோறும் பலப்பல ஊரினையும்உண் டாக்கினார்---பொருள் உற்பத்தியை விரி வாக்கினார்! நீரின்விசை யால்மின் சாரபலம் பெற்று சீரியநற் றொழில் ஊக்கினார்-நாட்டின் செல்வத்தைப் பன்மடங்காக்கினார்! வெட்ட வெளிக்களர் பொட்டலினைத் தங்கக் கட்டிச்சு ரங்கமாய் ஆக்கினார்-ம-பழக் காடுக ழனியுண் டாக்கினார்! ' தொட்டதெலாம் கரம் கிட்டும் பெருந்தொழில் திட்டங்கள் பற்பல தீட்டினார் ! சொன்ன தேதியில் செய்துமே காட்டினார் ! பாலை நிலத்தினை சோலைவனம் மலர் மாலைவனமென ஆக்கினார்-மந்த மாருதமும் ஆங்குறப் போக்கினார்! ஆலைகளைத் தொழிற் சாலைகளை, ஆக்க வேலைகளை அவர் பேணினார்-யுத்த வேட்கைச் செயலுக்கே நாணினார்!