பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூச் பீஹாரில் கொலையுண்ட குமரிக்கு வன்பசியின் கொடுமையினால் வயிறு காய்ந்து வாழவகை கேட்டுரிமை வேட்டுச் சென்ற அன்புள்ள சோதரியே! நின்னைப் போலீஸ் அரக்கர்படை துப்பாக்கிக் குண்டால் கொன்றார் என்பதொரு செய்தியினைக் கேட்டோம் ; நெஞ்சில் 'எரிநெருப்புக் கனல்மூளக் கண்டோம் ; மக்கள் துன்பத்தைத் துடைக்கவகை யற்ற சர்க்கார் தோட்டாவால் பதிலளிக்கும் கோரம்கண்டோம்! 1 ஆதிவெள்ளைக் காரரவர் ஆட்சிக் காலம் அழிவுற்ற வங்கத்தின் பஞ்சை மக்கள் நாதியற்று நடுத்தெருவில் செத்து வீழ்ந்து நாய் நரியும் கழுகுகளும் நகரி லெங்கும் வீதிவலம் வந்ததொரு கொடுமை கண்ட வேதனையும் நின் கொலையை விளம்பக் கேட்ட போதினிலே சிறுதுண்பாய்ப் போயிற் றம்மா ! போலீஸார் சுட்ட கதை அன்று கேளோம் ! 2 கண்டுமுதல் தானியத்தைக் கடத்திச் சென்று களஞ்சியத்தில் நிலவுறையில் பதுக்கும் பேரைக் கொண்டுவந்து நிறுத்தி, அவர் நெல்லை முற்றும் கொள்முதலாய்ப் பிடுங்குதற்குத் துணிச்ச லற்றே அண்டுமவர் பெருந் தயவால் அளிக்கும் நெல்லை அரசாங்கப் பட்டியலில் வரவு வைத்து,