பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு விழும் தேவைக்காய் அயலான் நாட்டைத் தொங்குகின்ற அரசியலார் உன்னைக் கொன்றார்! வான மழை பொய்த்ததினால் வளமே யில்லை ; வனச்செழிப்பு அற்றதினால் மழையும் இல்லை ஆனதினால் வாருங்கள் ! ஊர்கள் தோறும் . ஆலமரம் அரசமரம் எங்கும் நட்டுக் கானகத்தை வளர்த்துப் பசி தீர்ப்போம் என்று கதையளக்கும் அரசியலார் உன்னைக் கொன்றார்? வானமழை தரப்போகும் செந்நெல் அந்நாள் வாய்க்கரிசி போடுதற்கோ? வயிற்றுக் கரமோ ? 4 வள்ளலெனப் பேரிட்டு விலாசம் போட்டு வாழுகின்ற பகற்கொள்ளைக் கரரர் தம்மை, கொள்ளைவிலை கூறிநந்தம் குருதி மாந்தும் 'கோடாலிக் காம்புகளை, பதுக்கி வைத்துக் கள்ளவிலை வாணிபஞ்செய் கயவர் தம்மைக் கட்டிவந்து கிட்டியிட்டுக் கழுவி லேற்றி உள்ளுருவி உயிருருவிக் கொன்றா ரில்லை ! ' ' ஒருபிழையும் அறியாத உன்னைக் கொன்றார் ! 5 , டாட்டாக்கள் பிர்லாக்கள் டால்மி யாக்கள் . டாம்பீக முதலாளி வர்க்கக் கும்பல் மோட்டாவாய்க் கொழுப்பதற்காய் அயல் நாட்டாரின் மூலதனத் தோடுறவு கொண்டே நந்தம் நாட்டாரைச் சூறையிட்டுச் சுரண்டி வாழும் நயவஞ்சக் கொள்ளைதனைக் கொன்றா ரில்லை ! கூட்டாளி அதற்கானார் ! பசித்த வாய்க்கே கூழ்கேட்டுச் சென்றவுனைச் சுட்டுக் கொன்றார்! 8 2ம்