பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:22 விடுதலையென் றேய்த்திட்டார் ! எதற்கு? நம்மை , 'வெறி வேட்டை யாடுமுத லாளிக் கும்பல் ' கெடுதலையே செய்யவிடு தலையோ? வாழ்க்கை கெட்டழியும் பஞ்சைநிலைப் பட்டு மாந்தர் படுதலையே தேசவிடு தலையென் றாரோ ? .. பசிக் கொடுமை நீக்காது மக்கள் தம்மைச் சுடுதலையே மார்க்கமெனக் கொண்டால் அந்தச் சுதந்திரத்தை மாற்றுமொரு கடமை காண்போம் உன்னையுவர் சுட்டதொரு குண்டின் ஓசை ஒயாது எம்செவியில் ஒலித்தே ஓங்கிப் பின்னையவர் முடிசாய்ந்து பெயர்ந்தே வீழும் பெரும்புரட்சி நிகழ்ச்சியினை உலகுக் கிந்நாள் முன்ளையறி விக்குமொரு ஓசை! அன்னார் மூர்க்கவெறிக் கோர்முடிவு காணும் ஓசை ! கன்னிமகள் நின்கொலையின் பழியைப் பின்னாள் கழுவுகின்ற காலம்வரை ஒலிக்கும் ஓசை ! 1951