பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளை இதோ பிள்ளை ! பிள்ளை இதோ பிள்ளை ! - ஐயோ பிள்ளை இதோ பிள்ளை ! முந்தித் தவம்நோற்று வந்ததிருப் பிள்ளை! முன்னூறு நாள்சுமந்த என்னருல் மப் பிள்ளை ! அந்தி சந்தி கண் விழித்து அயராது காத்த அருமந்த பிள்ளை! எந்தன் ஆசைக்கொரு பிள்ளை (பிள்ளை இதோ- சீராட்டிப் பாராட்டி வளர்த்த சிறு பிள்ளை ! செந்தூரப் பொட்டிட்டு நான் மகிழ்ந்த பிள்ளை! ஓராட்டுப் பாட்டிசைத்து உறங்க வைத்த பிள்ளை ! ஒருபிள்ளை, இதுபோனால் மறுபிள்ளை இல்லை ! - (பிள்ளை இதோ-- முல்லைமுகைப் பல்லரும்பால் முத்தமிடும் பிள்ளை ! " முத்தமிடும் போதெழும்பும் பித்து வெறி கொள்ளை! புல்லரிக்க, சடலமெலாம் புளகமுறச் செய்யும் புத்தமுதச் சிறுகுதலை புகலுமிளம் பிள்ளை ! (பிள்ளை இதோ-~ பிஞ்சுவிரல் மென்கரத்தால் கஞ்சியை அளைந்து 'பேரமுத மாக்கிடுமென் ஆரமுதப் பிள்ளை ! நெஞ்சுக்கு புன்கவலை அஞ்சுகண ந் தன்னில் நீக்குமொரு புன்னகைவாய் பூக்குமொரு பிள்ளை (பிள்ளை இதோ -