பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழவகை யில்லாதே நாளும் பல தாயர் வாயெரிய வயிறெரிய வந்துவிற்கும் பிள்ளை! பாழடைந்த அரசியலைச் சூழு கலிக் கோளைப் பாருணரும் நாள்வரவைக் கூறவந்த பிள்ளை (பிள்ளை இதோ- பணந்தின்னிக் கழுகுபல வலம்திரியும் நாட்டில் பஞ்சைமக்கள் ஆருயிர்க்கோ விலைமலிந்த நாட்டில் பிணந்தின்னிப் பேயாட்சி தலைவிரித்த நாட்டில் - பிரளயத்தை அறிவுறுத்தும் பிள்ளை, இதோ " . - . . பிள்ளை! (பிள்ளை இதோ- 1952