பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னை தமிழ்த் தாயகமே வெல்க ! வெல்க! எழுகடலும் புடைபுடைத்து எழுந்தாற் போலே இமயவரை இடம்பெயர்ந்து எதிர்ந்தாற் போலே கொழும்வடவைத் தீப்பிழம்பு குமுறிச் சீறிக் "கொதித்தெழுந்து குலவையிட்டுக் குதித்தாற் . (போலே விழும்தமர இடிமுழக்கம் அண்டம் கீற . விசைபிறந்து திசைபரந்து வெடித்தாற் போலே 5எழுக படை. எனமுழக்கிப் புதுவை மக்கள் எழுந்துவிட்டார்! அவர் இயக்கம் வெல்க! வெல்க! கடல்கடந்து வந்த கொள்ளைக் காரர் நந்தம் - கருந்தனமாம் அருந்தமிழ் நன் னாட்டை, திட்டாய் திடல் திடலாய்ப் பிரித்தாண்ட சூழ்ச்சி வெல்வோம் ! தீந்தமிழர் வேறுபடோம்! சிதைந்து வாழோம்! உடல்பிளந்து இருகூறாய் வீழ்ந்த போதும் உயிர்சுமந்து எழுந்தஜரா சந்தன் போலே அடல்மிகுவோம், படைதிரள்வோம் என்றாங் கார்த்த அறச்சமரின் மறத்தமிழர் வெல்க! வெல்க ! 2 நீர்த்தொகையால், நெடுவரையால், நெறியால், பண்பால், நெஞ்சத்தால், மொழிவழக்கால் பிரிந்தி லாதோர் வேர்த்தொகுதி போற்பிணைந்த மக்கள் தம்மை . வேற்றூரான் அரணமைத்து வெல்லப் போமோ?.