பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாமறிந்த கம்பன் காரைக்குடி நகரின் கண்ணியரே !கம்பனது. பேருரைகள் கூறவந்த பெரியோரே! உமக்கெல்லாம் சீர்க்கம்பன் அடிபரவும் சிற்றம்பலம் வணக்கம். அத்தத் திருநாளில் அரங்கேற்றி, தமிழ்மொழியின் நித்தியத்தைப் பட்டயமாய் நீட்டிவிட்ட கம்பனை நீர்', சித்தரித்துக் காட்டு மென்று செப்பிவிட்டார் செயலாளர். சிறியேனோ-- எழுத்தாணி மழுத்தாங்கி எதுகை மோனைகளை விழுத்தாட்டி வாகைகொளும் வெற்றிக் கவியல்ல. ஆதலினால்---

    • கம்பத் திரு நாடா!

கண்பார்க்க வேண்டுமையா? வம்பு தும்பு பண்ணாமல் வந்தருள வேண்டுமையா! கும்பிட்டேன், அடியேனின் குறை தீர்க்க வருகையா !