பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழி நீ கொரிய நாடே! வாழி நீ கொரிய நாடே வாழி நீ வாழி வாழி 1 ஆழி சூழ் உலகில், மக்கள்

  • அரன்செயும் அறப்போ ராமேல்'

ஏழிரு பிறவி யேற்று: - . போர்க்கொடி ஏந்தி, மாற்றார் சூழினும் வெல்லார் என்னும் '. உண்மையின் சொரூப மானாய்! விலைக்களம் நச்சும் யுத்தம் வேட்கையர் நினது மண்ணைக் கொலைக்கள மாக்கிப் பன்னாள், கொடுமையே புரிந்த போதும் உலைக்களத் துருக்காய், மக்கள் உறுதியே இறுதி வெற்றி நிலைக்களம் காணும் உண்மை நெறியினை உணர்த்தி நின்றாய்! - 2 சிந்தையில் இரக்கம் இல்லாச் சிறுமதி யாளர் நின்மேல் செந்தழற் குழம்பின் குண்டு " சிதறியே சிதைத்து மக்கள் வெந்துடல் கருகிச் சாக - வீழ்த்திய போதும் வீழாய்! உந்திடும் தேச பக்தி - உருவமாய்ப் பொலிந்து நின்றாய் ! 3.