பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் சிங்கவெங் குருளை யொத்த வீரரைச் செருவில், கோஜே வெங்கொடும் நரகில் வெட்டி வீழ்த்திய போதும், காதல் மங்கையர் கற்பும் பொற்பும் : மானமும் பறித்த போதும் அங்குல நிலமும் மாற்றான் வசப்பட அளிக்கிலா தாய் ! போர்ப்படை கொண்டும், குண்டு மழையெனப் பொழிந்தும், சேனை வேர்ப்பட வீழத் தந்தும், வென்றிலா மாற்றார் நின்னை நேர்ப்படப் பொருத லாற்றார் கிருமிசேர் குண்டால் நின்னைத் தூர்ப்பட அழிக்கும் எண்ணம் துணிகினும் தோல்வி காணாய்!

அ நாசியர் இழைத்த நாசம் - வெள்குற, நாணிக் குன்ற, பாசிசக் கொடுமை பொய்யாய்ப் பழங்கதை போலாய்ப் போக, நீசமே புரிந்தும் வீழாக் ' குன்றென் நின்றாய் ; எங்கள் ஆசிய ஜோதி நீயே ! . ஆண்டுபல் லூழி வாழி ! “ விலகு நீ அமெரிக்காவே ! ” என்றெழுந் தெழுந்து விம்மி உலகெலாம் பரந்த மக்கள் குலமெலாம் ஒலிக்கும் ஒற்றைக்