பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரியாமல் காப்பாற்ற வேண்டுவதே... சமாதானம் ! 5 = 4 95 99TH கூண்டோடு மக்கள் தமைக் கொன்றொழிக்கும் அணுகுண்டைப். பூண்டோடு வேரறுத்துப் புதைப்பதற்கே... . சமாதானம்! 6 ஏர்முனையில் சோறளிக்கும் - ஏழைகளைப் பீரங்கிப் போர்முனைக்குக் கொண்டுசெல்வோர் பொடிவதற்கே... சீதாதானம் ? கலையைக் கவிதையினைக் கற்பனையைச் சூறையிட்டுக் கொலை வெறியைக் கலையென்போர் குலைவதற்கே ... சமாதானம் ! 8 உடை யுணவு குடியிருப்பை உத்தாரம் செய்யாமல் படை திரட்டும் போர்க்கொள்கை பாழுறவே... - சமாதானம் ! 3 உலகத்து மக்களெலாம் ஒன்றாகி, ஓரினமாய், கலகமற்றுச் சுகவாழ்வு காண்பதற்கே... சமாதானம் ! - 1951