பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கலாசார சுதந்திர' மகாநாட்டில் கலந்து கொண்ட எழுத்தாளனுக்கு : எந்தச்சு தந்திரம் கேட்டுநின் (ஹய் ?---அங்கு எவர்க்கு விடுதலை வேட்டு நின்றாய் ? சிந்தை துடிப்பதைத் தொட்டுணர்ந்தே உண்மை செப்டவையோ? மனம் ஒப்புவையோ ? 1. தெற்றிவி யர்வையைச் சொட்டுச் சொட்டாய்-சிந்தி - நித்தம்உ ழைப்பவர் தம்கு லத்தை . வற்றி மெ விந் திடச் செய்தவர் வாழ்வினை மாந்திக்கொ ழுப்பவர் தம்மவர்க் கோ ? பண்ணை வெளியிற் கழனிகளில்-பயிர் பச்சை விளைப்பவன் தன்வ யிற்றில் மண்ணைய் டித்தவன் செந்நெலை முற்றுற வாரிம டுப்பவர் தம்மவர்க் கோ ? ஆலைகளைத் தொழிற் சாலைகளை-பொருள் ஆக்கம் மலிந்திடும் நாடுகளை, சோலைவனங்களைப் பாலைவன மாக்கிச் சுட்டுப்பொ சுக்கிடும் சூரருக் கோ ? பேயுருக் கொண்டுவெ குண்டெழுந்து-யுத்தப் பீரங்கித் தீனியாய் மக்கள்தமை ஆயிர மாயிரம் கொன்று குவித்தவர் ஆவிகு டித்திடும் பாவியர்க் கோ ?