பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீட்டத் திரண்டெழுவோம் மீட்டத் திரண்டெழுவோம்---சிறை மீட்டத் திரண்டெழுவோம் ஓட்டைச் செவியராய், ஊமையாய் பார்வையில் ஊனமும் உற்றவராய்-மன ஒற்றுமை அற்றவராய்-பெற்ற - நாட்டை மறந்தவர் காதில் விடுதலை நாதம் ஒலித்தவளை-கவி : நாயகன் பாரதியை- (மீட்டத்- முடப் பழமையை, பொய்மையை, ஜாதிய ' மூர்க்க முதலைகளை --பகை மூட்டும் இனவெறியை-விரைந் தோட விரட்டிடும் பாடல்கள் பற்பல ஓதிய பாவலனை-சொல் லோவியன் பாரதியை- (மீட்டத்- வெள்ளையனின் பகற் கொள்ளையை, ஆதிக்க வேட்டை வெறித்தனத்தை-வெட்டி வீழ்த்துவம் என்றதிர்ந்தே --புயம் துள்ளிப் புடைக்குமோர் சொல்லை யருளி நம் தூக்கம் கலைத்தவனை--கவித் தோன்றலை, பாரதியை- (மீட்டத்- அன்னை திருக்குலம் தன்னை யடிமையாய் ஆக்கிடும் ஆணவத்தை-எதிர்த்' தார்த்திடும் போர்முரசை-எட்டு