பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பி துயர் துடைக்கத் தட்சணமே வாருமையா !

    • சத்தியமாய்ச் சொல்லுகிறேன்

சாகணேசன் மீதாணை? இத்தருணம் இங்குவந்து எந்தன் கலிதீர்க்கச் சித்தம் இரங்கியருள் செய்யுமையா !** -என்றிட்டேன். என்றவுடன், கல்விக் கடல் கடந்த கம்பன், தமிழ்ச் சொல்லின் செல்வன், கவிராசன் சிங்கேறு போல் வந்தான். 3 வந்தவுடன்.--. “ ராமா யணக் கதையை ரஞ்சகமாய்ப் பாடிவைத்த கோமானும் நீர் தாமோ ? கூறுமையா!” என்றிட்டேன். என்றவுடன், “ ஆமையா! நாமே தாம்! ஆணை எமக்கிட்டுப் - பூமிக்கு அழைத்ததுமேன்? புகலுமையா” என்றிட்டான் சீமான் கவிச் செல்வன். . 14 கூப்பிட்ட காரியத்தைக் "கூறித் தெரியணுமோ ?