பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பப் பொங்கல் காடுகளாய் மேடுகளாய் கரம்பாய், வேனிற் கானல் வெளி வெம்பரப்பாய்க் காட்சி தந்த நீடுலகைப் பண்படுத்தி நீர்க்கால் தேக்கி நெற்குலையும் செங்கரும்பும் நிமிர்ந்து விம்மப் பாடுபட்டுத் தினம் உழைத்துப் பட்ட பாட்டின் பயனையெலாம் பறிகொடுத்துப் பசியால், அன்பால் வாடுகின்ற ஏழைமக்கள் வாழ்வில் வற்றா வளஞ்சுரக்கும் நன் னாளே இன்பப் பொங்கல். 1 வானத்து இளமஞ்சின் மென்மை தோற்கும் வட்ட நிலாக் கதிர்க்குலத்தின் ஒளியும் நானும் கானத்து மயிற்றோகை வண்ணம் மங்கும் கைவண்ணத் தாலிந்த உலகின் மக்கள் மானத்தைக் காப்பதற்குத் துகில்கள் நெய்தோர் மானத்தைக் காக்கவொரு முழத்துண் டின்றி கூனத்துப் பிறவிகளாய் குறுகிச் சாம்பும் குறைதவிரும் நன்னாளே இன்பப் பொங்கல். 2. மண்ணிடித்துக் கல்லுடைத்துச் சுண்ணம் சேர்த்து மரம் பிளந்து கலையுளத்தின் மாண்பும் சேர்த்து விண்ணிடிக்கும் கோபுரத்தை, கலச கூட விமானத்தை அரண்மனையைக் கட்டித் தந்தோர். கண்ணுடைத்துப் பெருக்கெடுக்கும் கண்ணீர்சோரக் காற்றுமழை வெயில் தடுக்கக் காவல் இன்றிப் புண்ணடைந்த உளத்தோடு வாழும் புன்மை பேயொழியும் நன்னாளே இன்பப் பொங்கல். 3.