பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மானிடர்தம் உதிரத்தை, உயிரை, மாதர் மங்கல நன் நாண்கயிற்றை, மதலைப்பேச்சின் தேனடையாய்த் திகழ்கின்ற சிறார்கள் தம்மைத் தின்றழித்துக் கொன்றொழித்து ரத்தம் தேக்கி - நானிலத்தும் போர்வெறியை மூட்ட வெண்ணும் . நரவெறியர் சூழ்ச்சியெலாம் வென்று, மாந்தர் வானுலகைப் பூ நிலத்தில் நிறுவி வெற்றி வாகைபுனை நன்னாளே இன்பப் பொங்கல். 1956