பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தையா!.... நமஸ்காரம். கந்தையா ! உந்தன் கலியாணச் செய்தியினை முந்தை யிரவினில்தான் - முகங்கண்டு நானறிந்தேன்; சிந்தையெலாம் தென்திசைக்கே சென்று சென்று மீண்டுவர வந்துசெல்ல வழியின்றி வாழ்த்துகிறேன் திசைநோக்கி ! 2 உன்னை நினைந்து விட்டால் உள்ளமெலாம், பாலத்துச் சின்னத் தட்டாரத் . தெரு வீட்டு மாடியினை எண்ணி யெண்ணிப் பார்த்து ஏங்கும் ; மறுகணத்தில் . எதுக்களிக்கும் பூரிப்பால் வீங்கும், களியாடும் விம்மும், ஆர்ப்பரிக்கும். அந்நாளில்- கல்லூரிப் படிப்பதனைக் காடேற்றி, நம் வாழ்வின் செல்லரிப்பைப் போக்கி, சிந்தைதனில் வலுவேறிப் - புல்லரிக்க, நெஞ்சில்