பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் புத்தழுதத் தேன்சுரக்க அல்லும் பகலும் அறுபத்து நாழிகையும் குள்ளச் சமூகத்தைக் கூன் நிமிர்க்கக் கோலெடுத்து வெள்ளைத் தமிழ்ப் புலமை விருது கட்டி வாழ்ந்ததுவும், பாட்டென்று படங்காட்டிப் பம்மாத்துப் பண்ணிவரும் கூட்டத்தைக் கைலாசம் கூண்டோடு தானேற்ற வேட்டு வச்சிப் பாட்டெழுதி வீரம் விளைத்ததுவும், ஆற்று மணற்பரப்பில், அ. சீ. ரா. தம் வீட்டில் சோற்றை நாம் மறந்து தூக்கம் நமை மறக்க ஊற்றும் நெஞ்சமதில் உபேகைப் பெருக்கூறக் காற்றில் மிதக்க விட்ட கவிதைகளைக் கண்ணம்மன் கோயில் கா டவீதி முச்சந்தி மண்ண.றியும் ; ராணி மங்கம்மா ரோடறியும் ! அந்தப் பெரு வாழ்க்கை அரிசிக்காய், உப்புக்காய் சிந்திச் சிதறிப்போய்