பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்


சென்னை-திருச்சியிலே குந்திக் கிடந்தாலும் குன்றாமல் நாம் வாழ்வோம் ! சொந்தத் தமிழ்மொழியைச் சோற்றுக்காய்த் தள்ளிவிடோம் ! இருந்தாலும்- கர்ச்சனைசெய் வானொலிக்குக் கவிதைனை உன் நெஞ்சை அர்ச்சனையாய்த் தாராமல், அன்புத் தனித் துணையாய், வம்பிழுத்து மகிழ்விக்க வந்தவொரு சம்பத்தாய், நெஞ்சில் சலிப்பேறி நினைப்பெல்லாம் வேறுபடின் கொஞ்சிக் குலவி மனக் குறைதீர்க்கும் நன்மருந்தாய்,

  • இதயத்துக் கோட்டையிலே

இருள்போக்கி, கவிதையொளி உதயத்தைத் தூண்டுவதற் குற்ற தொரு வான்மகளாய், பதுமப்பெயர் கொண்டாள் பதும் மலர்க்கை பிடித்தாய் ; புதுமணத்து வாசலிலே. புன்னகைத்துப் போகின்ற வதுமகனே! நின்னை வாயார வாழ்த்துகிறேன். நீயும் நின் மனைத்துணையும் நீடுலகில் பீடுயர்ந்து