பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளூர்க் கவிராயா வேளூர்க் கவிராயா! விண்ணணச் செந்தமிழின் வாளொத்த கவியிரண்டும் வாசித்தேன்-நாளெல்லாம் வெந்தழலாற் பாட்டெழுதும் விருத்தா சலப்பெரியோய்! தந்திட்டேன் மிகவந் தனம் தோணியப்பர் பாடிவச்ச சூத்திரத்தைப் பார்த்தபின்னும் வீணுக்கே கவியெழுதும் வெட்டிகளைக்---கோணிக்குள் போட்டடைச்சிப் பெருச்சாளி போலடிச்சிச் சாகடிக்கப்.. பாட்டெழுதில் உண்டு பலன். காமனையும் சோமனையும் காவினையும் தென்றலையும் வாம முலையழகும் வருணித்து-சாமத்தில் குடை பிடித்துக் கூத்தாடும் கூட்டத்தார் தங்குடுமிச் ' சடை பிடித்துச் சாத்தல் சரி, தங்கக் கவியென்றே தமுக்கடிச்சிச் சொல்லிவரும் வெங்கத் திருக் கூட்டம் வீடுபெற-சங்கத்து நக்கீரன் தன்வழியில் நாமிருவர் சென்று நிதம் மொக்க வுண்டு பேனா முனை! 1945