பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேருக்கா கலைக்கழகம் ? அன்றொரு நாள் மாலை அடியேனும் ரத்தினமும் தின்ற “ டிபன்' செமிக்கத் . தெருச்சுற்றி வரும்வேளை, “ கல்லத்தி முடுக்கதனில் கலைக்கழகம் கூட்டுகிறார்; செல்லப்பா” என்றொருவர் செப்பிடவும், இரு பேரும் " நல்லதப்பா, வாபோவோம் ; நம்மூரூத் தோழருக்கும் கலையார்வம் பொங்கிடிச்சோ? கண்டு வருவமெனச் சென்றோம்... ஆங்கே சில தோழர் வீற்றிருந்து சிகரெட்டுப் புகை நடுவே

    • கலையார்வம் பொங்கிவரக்

கழகம் அமைக்கோணும் ; பலபலவாம் கலை மூலம் {பாட்டாளிப் பாமரர்கள் நிலையுயர்த்த நாமெல்லாம் நிசத்தைச் சொல்லோணும் ; நாடகங்கள் போட்டிடணும் ; நாமெல்லாம் நடிக்கோணும் ; பாடகர்கள் சேர்க்கோணும் ; பாட்டும் எழுதோணும் ;