பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடெல்லாம் கலைப்பேச்சு விரவி வரவேணும் ; நாடெல்லாம் நம்கலைக்கு நல்வரவு சொல்லோணும் ? என்றெல்லாம் - வீடதிரக் குரலெடுத்து : வீரங்கள் சொன்னார்கள். ஆஹா ! எத்தகைய புத்துணர்ச்சி ! என்னருமைத் தோழர்களே! இத்தினமே சுதினம்! இந்தப் பணிக்கெம்மைத் தத்தமிட்டோம் ” என்று சொலித் தாளமிட்டோம் கலைஞர் குழாம். அத்தனைதான்! கலையார்வம் அப்பாவி ஓர்சிலர்மேல் தொத்திடவும், அன்னவர்தம் தோள்தட்டி ஆர்ப்பரிக்க எத்தனித்தார்? அதுகண்டு, அன்றைக்கு-~-~- ஆரம்பக் கூட்டமதில் - ஆங்காரப் பேச்சுமிழ்ந்த சூரர் சிகாமணிகள் சொல்லாமல் கொள்ளாமல் பாரம் கழிந்ததெனப் . பவிசாய்த் திரிந்தார்கள் !