பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் ஆப்பசைத்த கவியாகி " அகப்பட்டுக் கொண்டவெனைக் காப்பாற்றும் ! சந்தேகம் களைந்து அறிவூட்டும்! பூப்போட்டு உம்மடியைப் பூசிப்பேன்! என்றுரைத்தேன். நல்லது* வோய் ! உ.ம்மனத்தின் நலிவதனை எம்மிடத்தே சொல்லு மென்றான் கவிராசன். " கவிராஜா! சொல்லுவதைச் . - செவி சாய்த்துக் கோளுமையா ! இங்கு சிலர்-- - மாவட்டம் பலகூட்டி மாநாட்டுப் பந்தரிட்டு, பாவட்டா மேல்தூக்கிப் பறக்கவிட்டு, கையதனில் தீவட்டி ஏந்தியுமைத் தீய்த்துவிட வேணுமென்று கூவித் திரிகின்றார்! நீரோ -- 1 ஆரியனாம் ராமனுக்கு அடிவருடி ஆனீராம்! வீரியனாம் ராவணனை விழத்தட்டி விட்டீராம்! சாதிவரு ணாசிரமச் சதி தனக்கு ஆளாகி ஆதித் தமிழ்க் குடிக்கு அநியாயம் செய்தீராம்!