பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 137 வாரதுவும் போறதுவும் வக்கணைகள் பேசுவதும் நேரம்கழிந் தால்கம்பி நீட்டுவதும் தொழிலாய்க் கொண்டார்கள், “ கள்ளக் கடை ஒழிக்கக் கலைக்கழகம் பாடுபடும்! கொள்ளைவிலை மோசடிக்குக் குழிதோண்டக் கவி எழுதும் ! பாடுபடும் பாட்டாளி பசி தீர்க்கக் கலைதீட்டும்! நாடுவளம் பெற்றுயர நல்ல கலை தனைவளர்க்கும் !” என்றெல்லாம், ஆத்திரங்கள் மிகக்காட்டி, ஆர்வமுடன் மக்கள் கலைச் சூத்திரமும் சாத்திரமும் " சொல்லிப் படித்தார்கள் ; கை நீட்டி வாய் நீட்டிக் கப்பி அடித்தார்கள் ; பை நீட்டி ஒன்றிரண்டு பைசாவும் தந்தார்கள் ; வாணிவிலாஸ் ஹோட்டலிலே வாய்ருசிக்கக் கைத்துட்டைப் போணி செய்த வேகத்தில் பொழிந்தார்கள் ! இப்படியாய்ச் சாணேற, முழம் வழுக்கச் சங்கம் வளர்ந்தது காண்!