பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கலைக்கழகம் இப்படியாய் கட்டெறும்பாய்த் தேய்ந்திற்று அலைக்கழியும் நிலையதளை ஆர்வமுள்ள ஓரிருவர் . கண்டார்கள். கண்டவர்கள் அந்நாளில் கழகத்தைத் தோற்றுவித்த தொண்டர் குழாம் தனைநோக்கி ஒருவார்த்தை சொன்னார்கள் : மேனா மினுக்கியர்போல் மேடையிலே வீற்றிருந்து பேனா விடுதலைக்குப் பேச்சுக்கள் ! தாளங்கள்.! வீணான வெறும் பேச்சு விண்ணணம் போதுங்காண்! காற்றோடு தான் பிறந்து காற்றோடு தான் மடியும் ஊற்றுக் கனவுகளை உதை கொடுத்துத் தள்ளுங்காண்! நித்தம் வியர்வைதனை நிலம்பாய்ச்சிப் பயிராக்கும் கொத்தடிமைப் பாட்டாளி - 1 குறை தீர்க்க வேண்டுமெனில் தத்துவங்கள் தன்னை மட்டும் தலைபாடமாக்கி இங்கு கத்துவதில் அர்த்தமிலை ; கழகத்தை நெறிப்படுத்த சட்டதிட்டம் உண்டானால் சாற்றுமையா? எதிர்காலத்