பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 139 திட்டங்கள் இன்னவென்று தீட்டுமையா” என்றிட்டார். என்றவுடன் பொட்டிக்குள் அதையெல்லாம் பூட்டிவைத்த பாவனையில் பட்டும் படாமலுமாய் பதிலேதோ கூறிவிட்டு விட்டும் பிரிந்துவிட்டார்; விலாசம் மறந்துவிட்டார்! பாட்டாளி மக்களுக்குப் பயன்விளைக்கும் கலையென்று கூட்டாகக் கூடிநிதம் கூத்தடித்துப் போய்விட்டால், ஊருக்கு ழைப்பவர்கள் ஒரு செயலும் புரியாது ஆருக்கோ விருந்தென்று அலட்சியமாய்ப் போய்விட்டால், பேருக்கா கலைக்கழகம் ? - ஆதலினால் சொல்லுகிறோம் உம்முடைய, சாதா வெறும் பேச்சில் "சம்பங்கள் சாயாது ! வாதாடும் வாய்வீச்சில் வளராது நம்கலைகள் ! கோதாவிலே இறங்கிக் கொள்கை நிலை நாட்டுதற்கு நெஞ்சில் இடமிருந்தால், நினைப்பில் சேவை செய