பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை நாள்?... நிலை விட்டு ரயில் மெல்லக் கிளம்பும் வேளை நிழல்போலே ரயில்வண்டிச் சன்னல் ஓரம் தலை காட்டி எழுந்தவொரு சிறிய தோற்றம் தலை நீட்டி உள்ளே நுழையக் கண்டேன். 1: . தாரெண்ணெய்க் கட்டியினால் செய்த பொம்மை தானல்ல அவ்வுருவம் ! அந்தோ ! வானக் காரென்னக் கறுத்திருந்த உருவம் நம்போல் கைகால்கள் கொண்ட சிறுபையன், ஐயா! 2. சின்னேரம் அச்சிறுவன். கூனிக்குன்றிச் . செயலற்று மூலையிலே. பதுங்கிப் பம்மி முன்னேறப் பயந்தவொரு பூனைபோலே மூலையிலே பதியிட்டு இருந்தான் ஐயா! 3. பொல்லாத வெங்கொடுமை மிடிமை வாழ்வில் ' புடம்போட்டு வார்த்தெடுத்த படிவம் போலே மெல்ல மெல்ல அச்சிறுவன் மூலைவிட்டு மெதுவாகக் காலூன்றி எழுந்து நின்றான். 4 அண்டையினில் வந்தவனும் நின்றான் ; ஏதோ ஆஸ்தானப் பாடகள்போல் நிமிர்ந்து நோக்கி தொண்டையினைக் கனைத்திருமிச் செருமி வாயில் தோன்றியதைப் பாடுதற்கே சித்தம் ஆனான். 5. மங்காத கலைச்செல்வம் மலிந்த நாட்டில் மகத்துவமும் பண்பாடும் செறிந்த நாட்டில்