பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காணவும் தெரிகி லாத . - களிப்புறு விஜய ரூபம் மாணுயர்ந் தோங்க, அன்பின் வெற்றிசேர் மாட்சி ஓங்க, தானையும் சேனை யின்றித் தமியனாய்ப் பொருது நின்றான்; வானவர் பேர்க பூமி வாயிலை அருகில் வென்றான். சிங்கவெங் குருளை யென்ன அன்னவன் செருவில், கையில் சங்கெடுத் தூதும் நாத

  • சாகரம் முன்னிப் பாய்ந்து

பொங்குறும் ; எதிரொ லித்துப் பொருதிடும் ; பொருத ஆங்கே கங்குலின் நரக வாயில் . கதவுங்கள். பொடிந்து வீழும். பலமிலா யாக்கை ; ரத்தப் - பசையிலா உடலம் ; என்னில் உலைவுறா மலையின் நெஞ்சம் உருக்கெனக் கொண்டோன்; என்றும் நிலைபெறும் உள்ள வன்மை நெறியதால் உலகை யெல்லாம் குலைவுறச் செய்யும் ஆற்றல் - கொண்டவன் காந்தி யெம்மான். 3,