பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் தாய்மொழிக்குக் கேடுபல தானிழைத்தீர் என்றுசொலி வாய்கிழியப் பேசி யமை வைகின்றார் ; மேலும் நீர் ஆஸ்திகம் பேசினராம்!" ஆரியர்கள் கூறியபொய்ச் - சாஸ்திரத்தைக் கதைத்தீராம்! சங்கத் தமிழ்க்கவிஞர் மோஸ்தரிலே பாடாமல் முழுமோசம் செய்தீராம்! வாஸ்தவமா இதுவெல்லாம் வழக்குரையும் ; அன்னவர்தம் " வாதுக்குப் பதிலுரையும் !* என்றிட்டேன்.

    • வாஸ்தவம் தான்!...

ஆஸ்திகம் பேசியதும் அடியேனா? என்னைப்போல் நாஸ்திகம் பேசியவோர் நாவலனைக் கண்டதுண்டோ ? கேளப்பா!- வானின் றிழிந்துவந்த மாபூத வைப்பெங்கும் ஊனைப் போல், உயிரைப்போல் உளன் என்றுஉளமாற நானாகச் சொன்னேனா? வேதமும் வேதியரும் - விரிஞ்சனும் தெரியாத