பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மண்ணதில் புதைந்து வீழ்ந்த மன்பதை உரிமை தானும், தண்ணருள் அழிந்த அன்பின் தகைமையும், அடிமை வாழ்வின் எண்ணருங் கொடுமை தன்னை எதிர்த்திட, எழுச்சிக் கீதம் ,, விண்ணுற முழக்கும் வீரம் விளைத்தவன் காந்தி வேந்தன். சாத்திரம் காணா உண்மைத் தன்மையைத் தேடி, துன்பத் தோத்திரம் பாடி, வையத் துயர், பசி துடைத்து, மக்கள் நேத்திரம் குளிர்வ தொன்றே நெறியெனத் தெளிந்து, கர்ம யாத்திரை சென்றான் காந்தி! ஈடென யாரைச் சொல்வாம்? 1949