பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாந்தி நிலவும் --


கன்னம் சிவப்புறக் கன்னியர் தம்முளக் காதல் விளம்புவ தும் -- வெகு நன்னய மாகவே இல்லற வாழ்வினில் நல்லறம் பூணுவ தும் - அவர் அன்னைய ராகி மதலையர் தம்மொடு ஆனந்தம் காணுவ தும் - போர் முன்னியெ ழுந்திடில் கண்ணிமைப்பில் மண்ணில் மூடி மறையர வோ ? செல்லச் சிறு நடை பயிலும் குதலையர் சிற்றில் சிதைப்பது வும் - மெல்ல மெல்லவந் தேபெற்ற அன்னையர் தம்மடி மீதில் அமருவ தும் - தாயர் முல்லை யரும்பெனும் பல்லொளி சிந்திட முத்தம் பருகுவ தும் - நமைக் கொல்லவரும் யுத்தப் பேய்புக நேர்ந்திடில் கொள்ளைகள் போகா வோ ? துண்டுப் பிறைநிலா வாரியில், நுண்துளி தூற்றும் இளம் பனியில் - கரு வண்டு பயின்றிடும் இங்கித நாதத்தில் , வாசக் குளிர்மல ரில் - சுகம் கண்டு குலவிடும் மக்களெலாம் சூறைக் காற்றெனப் போர் வரு மேல் - எரி , குண்டு பட்டு, வாழ்க்கை விண்டு பட்டு விழும் - கூக்குரல் கேளா வோ ?