பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 14 தாயர் புலம்பிட மைந்தர் தம் ஆவியைத் தட்டிப் பறித்த வெறி.-- யுத்தப் பேயர்தம் ஆதிக்க வேட்கையிலே உருப் பெற்றதோர் யுத்த வெறி ! ரத்தவெறி கொடும் யுத்தவெறி சாம் ராச்சிய வேட்டை வெறி-அன்று - நித்த நித்தம் கொரியா சிந்து ரத்தத்தில் நீச்ச லடித்த வெறி----எழிற் சித்திர பூமியைக் கொத்திக் குலைத்திடத் திட்டங்கள் தீட்டும் வெறி --அதை . இத்தினமே குழி வெட்டிப் புதைக்கு மோர் இயக்கமே சாந்தி நெறி. ஆசிய மண்ணகம் தன்னிலோர் அன்னியன் .. ஆதிக்கம் செய்யவி டோம்-~கொடும் நாசியர் கும்பலின் சூழ்ச்சிகளால் நமை நாசப் படுத்தவி டோம்--நந்தம் தேசீய மக்களைப் பீரங்கித் தீனியாய்த் தின்று கழிக்க விடோம்-விரி காசினி எங்கணும் சாத்தி நிலவிடக் கங்கணம் கட்டிடு வோம். ஆருயிர் தன்னைப்பி ளக்கும்செ யலுக்காய் அணுவைப் பிளக்க விடோம் ---நட்பின் பேருதவி யெனப் பொருதவி தரும் பேரங்கள் பேசவி டோம்-நந்தம் நேருவின் ஐம்பெருங் கொள்கை நெறி நின்று . நேசம் வளர்த்திடு வோம்--இந்தப் பாருல கெங்கணும் சாந்தியின் இன்னிசை பாடி மகிழ்ந்திடு வோம்.