பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் : குறிப்புக்கள் இந்தத் தொகுதியிலுள்ள பாடல்களில் முதல் மூன்று பாடல் களும் பூலோகபிர்மாக்களாக விளங்கும் உழைக்கும் மக்கள் நலம்" பற்றிப் பொதுப்படையாகப் பாடியவை, 4 முதல் 12 வரையுள்ள ஒன்பது பாடல்களும் கவியரங்கங்களில் அரங்கேற்றியவை. 13 முதல் 34 வரை&#ள்ள இருபத்தொன்று. பாடல்களும் பல் வேறு சரித்திர நிகழ்ச்சிகளின் மேலும், குறிப்பிட்ட சந்தர்ப் பங்களிலும் பாடப்பெற்றவை. ஒவ்வொரு பாட்டின் இறுதி யிலும் அந்தந்தப் பாடல் இயற்றப்பட்ட ஆண்டு காணப் படும். கீழே காணும் குறிப்புக்கள் பல்வேறு பாடல்கள் இயற்றப் பெற்ற சந்தர்ப்பத்தையும் பிற விவரங்களையும் குறிப்பிடு கின்றன. பாடல்களை நன்கு உணர்ந்து அனுபவிக்க இந்தக் குறிப்புக்கள் வாசகர்களுக்குப் பெரிதும் பயன்படும். யாமறிந்த கம்பன் காரைக்குடி கம்பன் கழகத்தார் ஆண்டுதோறும் நடத்தி வரும் கம்பன் திருநாள் நிகழ்ச்சிகளில், 10-4-1949 அன்று நடைபெற்ற கவியரங்கில் பாடப்பெற்றது. 'யாமறிந்த கம்பன் என்ற பொதுத்தலைப்பில் பல கவிஞர்கள் தத்தம் கவிதைகளை அரங்கேற்றினார்கள். அவ்வாறு அரங்கேறிய பாடல் இது. அத்தத் திருநாள்--பங்குனி மாதத்தில் அஸ்த நட்சத்திரம் கூடி வரும் நாள். அன்றுதான் கம்பன் தன் ராமகாதையை அரங்கேற்றினான் என்பது வரலாறு. சா. கணேசன்---காரைக்குடி கம்பன் கழகத்துச்செயலாளர். "வானின்றிழிந்து...சொன்னேனா ?”--குறிப்பு : அயோத்தியா காண்டக் காப்புச்செய்யுள்,