பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வேதமும் ...என்றேனா?-குறிப்பு : ஆரண்ய காண்டக் காப் புச் செய்யுள், "அன்றென்னில்... போட்டேனா ?-குறிப்பு ; யுத்த காண்டக் காப்புச் செய்யுள். வீடணன்போல்...வேதப்பொருள் இதுதான்"-யுத்த காண் டம் கும்பகருணன் வதைப்படலம், பாடல் 356 பற்றிய குறிப்பு. கல்விக் கடல் வங்கம்”-கல்வியென்னும் கடலைக்கடக்கும் மரக்கலம், கம் பன் என் காதலன் 1-4-1950 அன்று காரைக்குடி கம்பன் திரு நாள் கவியரங் கில் பாரதியின் கண்ணன் பாட்டு வழியில், பல கவிஞர்கள் கம்ய னைத் தோழன், தந்தை, காவலன், ஆசான், தெய்வம், பகைவன், காதலன் என்ற பாவத்தில் கற்பனை செய்து பாடினார்கள். அப் போது கம்பனைக் காதலனாகக் கற்பித்துப் பாடிய பாடல் இது. <*கன்னிக் கவிராயன்"--இளங் கவிஞன் ; ஆங்கிலத்தில் "Maiden poet என்று சொல்வதற்குச் சமானம். கம்பனும், ராமனது முதல் போர் அனுபவத்தை “கன்னிப்போர்' என்று குறிப்பிடுவதும் கவனிக்கத் தக்கது. "அறிதோறும்... கண்டறிந்தேன்"-குறிப்பு : குறள் 1110 “வேட்ட பொழுதெல்லாம்...போல்”-- குறிப்பு : குறள் 1105 இளமைத் தமிழ் - 22-3-1951 அன்று காரைக்குடி கம்பன் திருநாள் கவி யரங்கில் தமிழின் அருமை, பெருமை, எளிமை, தொன்மை, வளமை, இளமை, இனிமை முதலிய பண்புகள் பற்றி ஒவ்வொரு கவிஞரும் தத்தம் பாடல்களை அரங்கேற்றினார்கள். அப்போது தமிழின் இளமை குறித்துப்பாடி அரங்கேற்றிய பாடல் இது.