பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 "அந்தப் பழம் நாளில்... தமிழ் ஐயா !"-கவியரங்கத்துக்குத் தலைமை வகித்த வித்வான் திரு. கு. அருனாசலக் கவுண்டர், கவிராயருக்கு முன்னாள் கல்லூரி ஆசிரியராக இருந்தவர்: எனவே ஆசானுக்கு இங்கு வணக்கம் கூறப்படுகிறது. "வங்கம் ' கவிழ்ந்ததென"-(உருக்கிய) வெள்ளி வீழ்த் "தாற்போல. "கங்கைப் புதுப்புனல்"-ஆகாச கங்கை போன்று வானின்று வழிந்து வருவது போன்ற அருவி. "பூமாலை...பாவை”--சூடிக் கொடுத்த நாச்சியார் எனப் புகழ் பெற்ற ஆண்டாள். வசந்த வல்லி-திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய குற்றாலக் குறவஞ்சியின் கதா நாயகி. குறச்சிங்கி-குற்றாலக் குறவஞ்சியில் குறிசொல்லும் குறத்தி. மருதூர்ப் பள்ளி-முக்கூடற் பள் ளுவில் வரும் கதா பாத்திரம். "போயொழிந்த... இலக்கியமும்"-கடல் கொண்ட கபாட புரத் தோடு அழிந்துபோய்விட்டதாகச் சொல்லப்படும் இலக்கி யங்க ள், . . காற்று 7-4-1952 அன்று நடந்த காரைக்குடி கம்பன் திரு நான் கவியரங்கில் 'இயற்கைப் பத்து' என்ற பொதுத் தலைப்பின் கீழ் ஞாயிறு, திங்கள், காற்று, மழை, பனி, மலை, ஆறு, கடல், காடு, வயல் என்ற பத்துப் பிரிவுகளைக் குறித்து, பத்துக் கவிஞர் கள் தமது கவிதைகளை அரங்கேற்றினார்கள். அப்போது 'காற்று' என்ற தலைப்பில் அரங்கேற்றிய பாடல் இது. "மண்ணுலகத் தோசையெலாம்... பாரதியார்"-' நிலாவும் வான் 'மீனும் காற்றும்' என்ற தலைப்பில் பாரதி பாடியுள்ள பாட்டு, "எந்தன் திருநெல்லை...குறவஞ்சி'-திருநெல்வேலிச் சீமை யில் தோன்றிய திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய குற் றாலக் குறவஞ்சி