பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

  • சீதக் குளிர்...பாட்டினிலே”-குறிப்பு : 'மங்கையர் கண் புனல்

பொழிய, மழை பொழியும் காலம்' எனத் தொடங்கும் நந் திக் கலம்பகப் பாடல், இளநந்தி--- தந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் யாரெனத் தெரியா விட்டாலும், நந்திவர்மனின். தம்பியே அதனைப் பாடினான் என்று கருதப்படுகிறது. எனவே கலம்பக ஆசிரியருக்கு இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. என் முன்னே ...மின் கருவி"-அரங்க மேடையிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தாரின் ஒலிப்பதிவுக்கான 'மைக்” பற்றிய குறிப்பு. நம் நாடு 14-1-1948 பொங்கல் தினத்தன்று திருச்சி வானொலி நிலையத்தார் கூட்டிய கவியரங்கில், 'நம் நாடு' என்ற தலைப்பின் கீழ், பல கவிஞர்கள் கவிதைகளை அரங்கேற்றினார்கள், அப்போது அரங்கேற்றப் பெற்ற பாடல் இது. இந்தப் பாடல் சில பிற் சேர்க்கைகளோடும் ஒட்டுவெட்டுகளோடும் இதில் வெளியிட்ப் பெறுகிறது. 'தானாபதி -- தலைவன்; மந்திரி ; ஸ்தானாதிபதி. 'வியன் கங்கை '-பகீரத முயற்சியால் ஆகாயத்திலிருந்து வர வழைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கங்கை நதி. 'மல்லைக் கடற்கரை --மாமல்லபுரக் கடற்கரை(க் கற்கோயில்கள்) "அஞ்சு கஜத் துணிக்கும்...கெஞ்சுவதை"-1948ல் மில் துணிக்கு இருந்த ரேஷனைக் குறிப்பிடுவது. அப்போது ஒவ்வொருவருக்கும் ஐந்து கஜத் துணிதான் கிடைத்து வந்தது. அதற்கும் கிராக்கி ; அடிபிடி. . . வெங்க் கருத்திகுழு"-அறிவு சூன்யமான வெறும் கூட்டம். "அந்தப் பரிசு"-கவியரங்கில் கலந்துகொண்ட கவிஞர்களுக்கு வானொலி நிலையத்தார் தரும் சன்மானத் தொகை.

  • வண்டுகட்டி'--திருநெல்வேலி வழக்குச் சொல். ஊறுகாய் கெட்

டுப்போகாமல், பானையைத் துணியிட்டு மூடி மறைத்தல்.