பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 சுதந்திரம் 15-8-1949 சுதந்திர தினத்தன்று சென்னை வானொலி நிலையத்தார் கூட்டிய கவியரங்கில் 'சுதந்திரம்' என்ற பொதுத் தலைப்பின் கீழ், பல கவிஞர்கள் தமது கவிதைகளை அரங்கேற்றி னார்கள். அப்போது அரங்கேறிய பாடல் இது. சிற்றரசர்தம் கூட்டம்"சுதந்திர இந்தியாவுடன் இணைய மறுத்து, சண்டித்தனம் செய்து வந்த சமஸ்தானாதிபதிகள். துஞ்சலும் இலர் - 13-4-1953 தமிழ் வருடப் பிறப்பன்று திருச்சி வானொலி நிலையத்தார் கூட்டிய கவியரங்கில், கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி பாடிய உண்டால் அம்ம இவ்வுலகம்' என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலின் (புறம்: 182) பல்வேறு கருத்துக்களைத் தத்தம் கவிதைகள் மூலம் வியாக்கியானம் செய் தார்கள் பல கவிஞர்கள். அந்தப் பாடலின் ஓரடியான 'துஞ்ச லும் இலர், பிறர் அஞ்சுவ தஞ்சி' என்ற கருத்தை விளக்கிப் பாடிய பாடல் இது. "அஞ்சுவதற் கஞ்சுவது ... அறிவோம் யாம்" --குறிப்பு : குறள். 428, கருப்பட்டி--திருநெல்வேலி வழக்குச் சொல். கருப்புக்கட்டி ; பனை வெல்லம், வாழ்க்கை வளமுற் : அறிவு . - 1956 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அகில இந்திய வானொலி நிலையத்தார் ரேடியோ வாரம் கொண்டாடினார்கள். 'ரேடியோ வார'க் கொண்டாட்டத்தின்போது 2-3--1956 அன்று கூட் டப்பெற்ற கவியரங்கில் 'வாழ்க்கை வளமுற' என்ற பொதுத் தலைப்பின் கீழ், பல கவிஞர்கள் பல்வேறு பண்புகளைப் பற்றிய தத்தம் கவிதைகளை அரங்கேற்றினார்கள். அப்போது 'அறிவு' என்ற பண்பு குறித்துப் பாடி அரங்கேற்றிய பாடல் இது. "தக்கது . ஈதென்றும் ... கம்பத் திருநாடன்"--குறிப்பு : கிஷ் .